Bigg Boss 7 Tamil : “ரெண்டு பேரும் தனியா உட்கார்ந்து பேசவா ஷோவுக்கு வந்தீங்க”… மணியை எச்சரித்த ரவீனாவின் குடும்பத்தினர்!
December 21, 2023 / 06:10 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு (2023) ஜனவரி 22-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. 105 நாட்கள் நடைபெற்ற இந்த சீசனில் அஸீம் டைட்டில் வின்னர் என்றும், விக்ரமன் ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.
‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஷன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயக்குமார், ஜோவிகா விஜயக்குமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவணா விக்ரம், யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், விஜய் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி பவா செல்லத்துரை சில காரணங்களால் வெளியேறி விட்டார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி விஜய் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி யுகேந்திரனும், வினுஷாவும் எலிமினேட் செய்யப்பட்டனர்.
பின், தினேஷ் கோபால்சாமி, அன்னபாரதி, அர்ச்சனா, RJ ப்ராவோ, கானா பாலா ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியானார்கள். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி அன்னபாரதி எலிமினேட் செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் 12-ஆம் தேதி ஐஷு எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 19-ஆம் தேதி கானா பாலா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 25-தேதி RJ ப்ராவோ எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த நவம்பர் 26-தேதி அக்ஷயா எலிமினேட் செய்யப்பட்டார்.
கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி அனன்யா எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி கூல் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ரவீனாவின் குடும்பத்தினர் வீட்டிற்குள் என்ட்ரியாகி மணியை திட்டுகிறார்கள். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.