ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’… வெளியானது செம மாஸான ட்ரெய்லர்!

  • October 3, 2023 / 05:02 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த படத்தை இயக்குநர் வம்சீ இயக்கி வருகிறார்.

இதில் மிக முக்கிய ரோல்களில் ரேணு தேசாய், அனுபம் கெர், முரளி ஷர்மா, நுபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார், மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற அக்டோபர் 20-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus