மொத்த செலவையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் – ரவீந்தர் சந்திரசேகர்!

  • July 14, 2020 / 02:10 PM IST

நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணம் செய்து கொண்ட உடனேயே, பீட்டர் பாலுக்கும் அவரது முதல் மனைவிக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்று சர்ச்சை கிளம்பியது.

இதற்கு பல பிரபலங்களும் வனிதாவை சாடியும், அவருக்கு அறிவுரை கூறியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். அவர்களின் இந்த பதிவிற்கு வனிதா அதிரடியான பதில்களை தந்து இணையதளம் முழுவதும் இவரது சர்ச்சையான பதிவுகள் தான் வலம் வந்தன.

சமீபத்தில் ரவீந்தர் சந்திரசேகர், வனிதா ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்து ஆகாத ஒருவரை கல்யாணம் செய்து கொண்டது குறித்து விமர்சனம் செய்துள்ளார். இதைக் கண்டித்து வனிதா அவரை சரமாரியாக கேள்விகளை கேட்டும், அடுத்தவரின் பர்சனல் விஷயத்தில் தலையிடுவது மிகவும் கேவலம் என்றும் பேசியுள்ளார்.

மேலும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவது சுலபம், எனக்கு உடனடியாக நாற்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது அதை கொடுக்க முடியுமா என்று நக்கலாக கேட்டுள்ளார்.

தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர் ரவீந்தர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் “நான் நீங்கள் கேட்ட பணத்தை கண்டிப்பாக கொடுக்கிறேன். அதுமட்டுமில்லாமல் நீங்கள் பண நெருக்கடியில் இருக்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது, அதனால் உங்கள் குழந்தைகள் படிப்பு செலவையும், ஏன் உங்கள் கல்யாண செலவையும் கூட நானே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு ஒரு சகோதரி போல. இதை நான் மீடியா விளம்பரத்திற்காக கூறவில்லை. நான் தெய்வமாக வணங்கும் என் தாய் மீது ஆணையாக கூறுகிறேன்” என்றிருக்கிறார் ரவீந்தர்.

மேலும் அவர் “உங்களது பாங்க் டீடைல்ஸ் நீங்கள் குறிப்பிட்டால் நிச்சயம் உங்களுக்கு ஒரு சகோதரனாக உதவி செய்வேன்” என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் தரன்குமார் இசையில் கே.பாக்யராஜ், சான்தனு, அதுல்யா ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் “முருங்கக்காய் சிப்ஸ்”. இந்த படத்தை ரவீந்தர் சந்திரசேகர் தான் தயாரிக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus