கோலிவுட் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர். இவர் தயாரிப்பில் ‘நளனும் தமயந்தியும்’ ’சுட்டகதை’ ’நட்புனா என்னனு தெரியுமா’ ’முருங்கக்காய் சிப்ஸ்’ உட்பட பல படங்கள் வெளியாகி இருக்கிறது .
சில மாதங்களுக்கு முன் லிப்ரா ரவீந்திரனுக்கும் சீரியல் நடிகை மகாலட்சுமிக்கும் திருமணம் நடந்து . தற்போது மகாலட்சுமி அன்பே வா என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .திருமணத்துக்கு பிறகு தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தை பூசத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோயில் ஒன்றில் தனது மனைவி மகாலட்சுமியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்த ரவீந்திரன், தை பூசம் – நாங்கள் நேசிக்கும் உறவுகளுக்கு மட்டும் இல்லை. எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும் வேண்டி கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார் . இந்த பதிவுக்கு ஹார்ட் ஸ்மைலியை கமெண்ட் செய்துள்ளார் மகாலட்சுமி.