‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

  • February 8, 2023 / 12:18 PM IST

பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் கியாரா அத்வானி. இவருக்கு ஹிந்தியில் அமைந்த முதல் படம் ‘FUGLY’. இதனைத் தொடர்ந்து ‘M.S.தோனி’ படத்தில் நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

‘M.S.தோனி’ படத்துக்கு பிறகு நடிகை கியாரா அத்வானிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ஹிந்தி படங்கள் குவிந்தது. இப்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கும் தெலுங்கு படமான ‘RC15’-ல் கியாரா அத்வானி நடித்து வருகிறார்.

இதில் ஹீரோவாக ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகுமாம்.

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 7-ஆம் தேதி) ராஜஸ்தானில் பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை கியாரா அத்வானி திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus