விக்ரம் படத்தை பார்த்து வியந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

  • June 13, 2022 / 03:43 PM IST

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி முடித்துள்ளார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. மேலும் நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. மல்டி ஸ்டாரர் படமாக இந்த படம் உருவாகி உள்ளதால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்த படம் வசுல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் சல்மான் கான் மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு விக்ரம் படத்தை காமித்துள்ளனர். இதை பற்றி நடிகர் சிரஞ்சீவி இணையத்தில் பதிவு செய்துள்ளார் மேலும் விக்ரம் படத்தை புகழ்ந்து பேசியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus