ஜெய் பீம் படத்தை பார்த்துவிட்டு கண்ணீர்விடும் பெய்ஜிங் மக்கள் !

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெய் பீம். இந்த படத்தை டி.ஜே .ஞானவேல் இயக்கி இருந்தார் . இந்த படம் வெளியான பிறகு பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் எழுந்தது . உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் உண்மையான காவல் துறை அதிகாரியின் பெயரை மாற்றியது மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அடையாளத்தை காண்பித்த காரணமாக பல பிரச்சனைகள் எழுந்தன .

ஆனாலும் பொதுமக்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்தனர் . இந்த படத்தில் நடித்த மணிகண்டன் , லிஜோமோல் ஜோஸ், சூர்யா என எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர் .


இந்நிலையில் 12வது தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய் பீம் திரைப்படத்திற்கான விருதுகள் கிடைத்துள்ளது .சிறந்த திரைப்படம் மற்றும் ராஜா கண்ணு கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. மேலும் ஜப்பானில் நடந்த ஒசாகா திரைப்பட விழாவிலும் இந்த படம் விருதுகளை குவித்தது .


தற்பொழுது ஜெய் பீம் படம் 12வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் டி’ஆன்டன் விருதுகளில் திரையிடப்பட பட்டது . ஜெய் பீம் படத்தை பார்த்த அந்த நாட்டு மக்கள் திரையரங்குகளில் கண்ணீர் விட்டு அழுதனர் . இது போன்ற நல்ல தமிழ் படங்களை பார்க்க விரும்புவதாக அவர்கள் கருத்து தெரிவிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Share.