ரசிகர்களின் பாராட்டு மழையில் ‘ஜெய் பீம்’… ரியல் லைஃப் சந்துரு இவர்தான்!
November 2, 2021 / 08:24 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள ‘ஜெய் பீம்’, சூர்யாவின் கேரியரில் 39-வது படமாம்.
இப்படம் இன்று (நவம்பர் 2-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸாகியுள்ளது. சூர்யா வக்கீலாக நடித்துள்ள இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு, சுஜாதா சிவக்குமார், சிபி தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தற்போது, இந்த படத்தை பார்த்த ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் ட்விட்டரில் “ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்கு குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சூர்யா ட்விட்டரில் “நீங்கள் வகுத்த பாதை… விதை நீங்க போட்டது! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் மனமார்ந்த நன்றி!!” என்று கூறியுள்ளார். நடிகர் கமல் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இந்த படத்தை பார்த்து ரசித்து ட்விட்டரில் பாராட்டிய வண்ணமுள்ளனர்.
1993-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சந்துரு என்பவர் ஒரு பழங்குடிப் பெண்ணுக்கு போலீஸால் ஏற்படும் ஒரு பிரச்சனைக்காக நடத்திய உண்மையான வழக்கை மையமாக வைத்து தான் இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கறிஞர் சந்துருவின் கரியரில் அவருக்கு மிகவும் பிடித்த வழக்கும் இதுதானாம். இந்த சந்துருவாக தான் இப்படத்தில் வலம் வந்து அசத்தியிருந்தார் நடிகர் சூர்யா. இப்போது அந்த ரியல் லைஃப் சந்துருவின் ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.
#JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl , ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். pic.twitter.com/YjSkfaeeiO