தமிழ் சினிமா ரசிகர்கள் கிட்டதட்ட இரண்டு வருடம் எதிர்பார்த்து காத்திருந்த படம் தான் அஜித் நடித்த வலிமை. வலிமை படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றாலும் வசூல் ரீதியா வெற்றி பெற்று இருக்கு.
வலிமை படத்துல நடிகர் அஜித் தோற்றத்தை பலர் விரும்பவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவரோட எடை அதிகமா இருக்கு, ரொம்ப குண்டா இருக்காரு போன்ற விமர்சனங்களுக்கு ஆளானார்.
இந்த நிலையில அவர் அடுத்து நடிக்கும் படத்திற்காக உடல் எடையை குறைக்க போவதா தகவல் வெளியாகியது. இந்த நிலையில அஜித் கேரளாவிற்கு சென்று இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கு. அங்க அவர் ஆயுர்வேத சிகிச்சைக்காக தான் கேரளா சொன்று இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
கேரளாவில் இருந்து அஜித் திரும்பும் பொழுது மீண்டும் ஆரம்பம் படம் போன்ற கெட்டப்பில்
வரப்போகிறார் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.