தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.
இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘டான்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கவிருப்பதாகவும், இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் முதலில் சொல்லப்பட்டது.
சமீபத்தில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்காததால் அவர் ‘தலைவர் 170’-ஐ இயக்கப்போவதில்லை என்று கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, சிபி சக்கரவர்த்திக்கு ரஜினியும், ‘லைகா’ நிறுவனமும் ரெட் சிக்னல் கொடுத்ததுக்கான இன்னொரு காரணம் தெரியவந்துள்ளது.
சிபி சக்கரவர்த்தி தனது முதல் படமான ‘டான்’-க்காக ரூ.25 லட்சம் சம்பளம் வாங்கினார். இவரின் 2-வது படத்துக்கு ரூ.6 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்திருக்கிறது ‘லைகா’ நிறுவனம். ஆனால், இயக்குநர் சிபி சக்கரவர்த்தியோ தனக்கு ரூ.15 கோடி சம்பளம் வேண்டும் என ரஜினியிடமே கேட்டிருக்கிறார். இதைக் கேட்டு ஷாக்கான ‘லைகா’ நிறுவனம் சிபி சக்கரவர்த்தி ‘ரஜினி 170’-ஐ இயக்கவே வேண்டாம் என்ற முடிவை எடுத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இப்போது இப்படத்தை சிபி சக்கரவர்த்திக்கு பதிலாக ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.