சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பத்து தல’. இந்த படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படம் மூலம் ஃபேமஸான கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இதில் மிக முக்கிய ரோல்களில் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் மேனன், டிஜே அருணாச்சலம், மனுஷ்ய புத்திரன், கலையரசன் நடித்துள்ளார்களாம். இதற்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தை வருகிற மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா மீடியாவுக்கு கொடுத்த பேட்டியில் “முதலில் இதில் நடிக்க டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் சாரை தான் அணுகினோம்.
ஆனால், ரஜினி சார் இப்படம் கன்னடத்தில் ஹிட்டான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக் என்பதால் இதில் நடிக்க நோ சொல்லி விட்டார். அதன் பிறகே சிலம்பரசனை அணுகினோம். அவர் உடனே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்” என்று கூறியுள்ளார்.