தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார்.
‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவின் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிக்க, இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருக்கிறார்.
ரஜினி நடிப்பில் 1992-ஆம் ஆண்டு உருவான படம் ‘ஜில்லாக் கலெக்டர்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்க, ‘AVM புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்தது. இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்தார். இதில் மிக முக்கிய ரோலில் ‘நவரச நாயகன்’ கார்த்திக் நடித்தார். இப்படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்கள் நடைபெற்றது.
ஆனால், இதன் பட்ஜெட் அந்த காலகட்டத்தில் ரொம்ப அதிகம் என்று கருதப்பட்டதால் படத்தை டிராப் செய்தனர். இந்த படம் டிராப்பானதற்கு பிறகே ரஜினி – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கூட்டணியில் ‘எஜமான்’ படம் தயாராகி ரிலீஸானது. இதில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.