‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் புதிய படத்திலிருந்து விலகிய சிவகார்த்திகேயன்… என்ன காரணம் தெரியுமா?

  • November 3, 2022 / 10:15 AM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

இப்போது ஐஸ்வர்யா ‘Oh Saathi Chal’ என்ற ஹிந்தி படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், ஐஸ்வர்யா இயக்கவிருக்கும் புதிய தமிழ் படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தகவல் வந்தது.

 

இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிக்கவிருக்கிறார். இதில் ஹீரோவாக நடிக்க முதலில் சிவகார்த்திகேயனை அணுகினார் ஐஸ்வர்யா. சிவகார்த்திகேயனுக்கு ஐஸ்வர்யா சொன்ன கதை மிகவும் பிடித்து விட்டதாம்.

ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க நோ சொல்லி விட்டாராம். தற்போது, அவருக்கு பதிலாக அதர்வா கமிட்டாகியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus