நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் சில வாரங்களுக்கு முன் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் .
இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மிஷ்கின் , நடிகர்கள் அர்ஜுன் , மன்சூர் அலி கான் , ப்ரியா ஆனந்த் , த்ரிஷா , உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .
இந்நிலையில் விஜய் 67 படத்தின் தலைப்பு லியோ என்று அறிவித்து இருந்தனர் . படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது . ஆனால் நடிகை த்ரிஷா மட்டும் காஷ்மீர் சென்ற சில நாட்களிலே ஆள விடு டா சாமி என்கிற மாதிரி காஷ்மீரில் இருந்து திரும்பி உள்ளார் .
தற்போது இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . திரிஷா திடீரென அங்கிருந்து வந்திருப்பது நெட்டிசன்களுக்கு மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. திரிஷா அந்த படத்தில் இருந்து விலகி விட்டாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால் உண்மையில் த்ரிஷாவால் காஷ்மீரில் நிலவும் குளிரை தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதால் தான் திரிஷா திரும்ப வந்துவிட்டார் என்று கூறப்படுகிறது .
காஷ்மீர் குளிரை தாங்க முடியாத திரிஷா என்னுடைய பார்ட் வரும்போது வந்து நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்பி இருக்கிறார். தயாரிப்பு நிறுவனமும் இதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளது .