‘மாநாடு’ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது நம்ம ‘தளபதி’ விஜய்யா?… ஏன் மிஸ் ஆச்சு தெரியுமா?
November 27, 2021 / 12:15 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படத்தை ‘SSI புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுப்பையா ரிலீஸ் செய்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது, இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டும் என வெங்கட் பிரபுவின் முதல் சாய்ஸாக இருந்தது ‘தளபதி’ விஜய் என தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ஒரு பார்ட்டியில் வெங்கட் பிரபுவுடன் எடுத்துக் கொண்ட ஸ்டில் லீக்கானதால், விஜய் இதில் நடிக்க மறுத்து விட்டாராம்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.