திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த சமீரா ரெட்டி அதிகமாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார். தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான “வாரணம் ஆயிரம்” படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார் சமீரா ரெட்டி.
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தார். வாரணம் ஆயிரம் படத்தில் வரும் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை” பாடலில் இவரை ரசிக்காத ஆளே கிடையாது.
அவ்வளவு அழகான சமீர ரெடி தமிழில் நடிகர் அஜீத்துடன் “அசல்” எனும் படத்தில் நடித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான “வேட்டை” படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக கடைசியாக நடித்தார் சமீரா ரெட்டி.
இவர் அக்ஷய் வர்தே என்பவரை 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அன்றிலிருந்து தன் குடும்பத்தில் கவனம் செலுத்திவரும் இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
தனது குடும்பத்துடன் லாக்டவுன் நேரத்தை செலவிட்டு வரும் சமீரா ரெட்டி, இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்களையும் தன் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் மேக்கப் இல்லாமல் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். இதைப்பற்றி அவர் கூறியுள்ளதாவது “சமீபத்தில் ஒரு தாய் எனக்கு நான் மிகவும் குண்டாக இருக்கிறேன், அழகாக தெரியவில்லை குழந்தை பிறந்ததிலிருந்து என் அழகு போய்விட்டது போன்று எனக்கு தோன்றுகிறது, ஆனால் உங்களை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்று வருத்தமாக கூறினார். அதனால் எந்த மேக்கப்பும் இல்லாமல் இந்த வீடியோவை வெளியிட வேண்டுமென்று நான் முடிவு செய்தேன். நாம் எப்படி இருக்கிறோம் என்று கவலைப்படவே கூடாது. நம் லட்சியத்தை நோக்கி மட்டுமே பயணம் செய்ய வேண்டும். மேலும் அழகு என்பது மனதில் இருக்க வேண்டும். நான் வளரும் பருவத்தில் இந்தமாதிரி பிரச்சினைகளை அதிகளவில் சந்தித்திருக்கிறேன். அதனால்தான் ஒருவர் எனக்கு இப்படி மெசேஜ் செய்ததையடுத்து மேக்கப் இல்லாமல் வீடியோ போட வேண்டும் என்று முடிவு செய்தேன். அனைவரிடமும் ஏதேனும் ஒரு குறை இருக்கத்தான் செய்யும் அது நாளடைவில் மாறிவிடும், அதற்காக நாம் மன உளைச்சலுக்கு ஆளாக கூடாது. அனைவரும் சந்தோஷமாக இருங்கள்” என்று ஊக்குவிக்கும் விதமாக இந்த வீடியோவில் பேசியுள்ளார்.
இவரது இந்த ஊக்கம் கொடுக்கும் விதமாக வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.