பாலிவுட்டின் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் நேற்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலைக்கான போதிய காரணங்கள் பற்றி இன்னும் அறியப்படாத நிலையில் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. சுஷாந்த் சிங்கின் முன்னாள் மேனேஜர் திஷாஷளியான் கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் ,அதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இவர் இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மன அழுத்தப் பிரச்சினை காரணமாக பல மாதங்கள் இவர் சிகிச்சை பெற்று வந்தார் என்றும், அதிலிருந்து விடுபட யோகா ,உடற்பயிற்சி என்று ஏதேனும் ஒன்று செய்து கொண்டுதான் வந்தார் என்றும் செய்திகள் வந்துள்ளன.
மேலும் இவர் தனது டிவிட்டர் கவர் போட்டோவில் ஒரு பெயிண்டிங் வைத்துள்ளார். இந்த பெயிண்டிங் வரைந்த ஓவியர், ஒரு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதன் மூலமாகவும் அவர் தனது நிலைமையை எடுத்துக் கூற முற்பட்டுள்ளார் என்பதறிந்து பலர் வேதனைப்பட்டு வருகிறார்கள்.
இவர் தற்கொலை குறித்து சுஷாந்தின் தோழியும், பிரபல பாலிவுட் ஒப்பனையாளருமான சப்னா பவ்னானி “பல வருடங்களாகவே சுஷாந்த் கஷ்டங்களை சந்தித்து வந்தார் என்பது நிறைய பேருக்கு தெரிந்த விஷயம். ஆனால் அவருக்கு உதவிக்கரம் நீட்ட திரைப்படவுலகினர் யாரும் முன்வரவில்லை என்பதுதான் உண்மை. இன்று அவருக்கு அனைவரும் இரங்கல்கள் தெரிவிப்பது போலியாகவே எனக்கு தெரிகிறது. இங்கு உனக்கு யாரும் நண்பர்கள் அல்ல,RIP” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுஷாந்தின் மரணம் குறித்து செய்தி கேட்ட அவர் தந்தை கே .கே. சிங் உடல்நிலை தற்போது மோசமாகவுள்ளது. இருப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு தன் தந்தைக்கு போன் செய்த சுஷாந்த் , பத்திரமாக இருங்கள் வெளியில் எங்கும் செல்லாதீர்கள் என்று கூறியிருக்கிறார். இதுவே அவரது கடைசி வார்த்தைகளாக இருக்கும் என்று அவர் தந்தை எதிர்பார்க்கவில்லை.
சுஷாந்தின் மரணத்திற்கு பல திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல்வாதிகளும் தங்கள் இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இவரின் மரணத்திற்கு பிரதமர் மோடி அவர்கள் ,தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு இளம் வயதில் தற்கொலை செய்துகொண்ட இவரின் இழப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.