கோவை சரளா இதுவரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்?

  • September 4, 2020 / 06:30 PM IST

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் பட்டியல் அதிக அளவில் இருந்தாலும், காமெடி நடிகைகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு. அந்த காலத்து நகைச்சுவை நடிகைகளில் பெயர் போனவர் ஆச்சி மனோரமா.

அவரைத் தொடர்ந்து நடிகை கோவை சரளா அந்த இடத்தை பிடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி அனைத்து முன்னணி தமிழ் நட்சத்திரங்களின் படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

அதிகமாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து அனைவரையும் மகிழ்வித்துள்ளார். 58 வயது ஆகிய நிலையில் இன்று வரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பலரும் இவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்களாம்.

சினிமாவில் சுமார் 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள கோவை சரளா, தனக்கு தன் குடும்பத்தில் இருக்கும் தம்பி தங்கைகளை பார்த்துக் கொள்வது அவர்கள் குழந்தைகளை தன் குழந்தைகள் போல பார்த்துக் கொள்வதிலேயே காலம் சென்று விட்டது என்றும் அந்தப் பொறுப்பை இருந்ததாலேயே தன் திருமணத்தை பற்றி அவள் யோசிக்கவே இல்லை என்றும் கூறியிருக்கிறாராம்.

அதுமட்டுமின்றி அவர் பாணியில் நகைச்சுவையாக என்னிடம் இருந்து ஒரு ஆண்மகன் தப்பித்து விட்டான் என்று கூறுவாராம். தன் குடும்பத்தை பார்த்துக் கொள்வது மட்டுமின்றி, மாதாமாதம் அனாதை இல்லங்களுக்கும் பணம் கொடுத்து பலரை வாழ வைத்து மகிழ்கிறார் இவர். தன் வாழ்நாள் முழுவதும் அடுத்தவருக்கு உதவி வாழ்வதே தன்னுடைய நோக்கம் என்று கூறி மக்கள் மனதில் பெரிய இடத்தை தற்போது அவர் பிடித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus