ஆட்டநாயகன் என்று நிரூபித்த அஜித் !

  • February 10, 2023 / 09:20 PM IST

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துணிவு . நேர்கொண்ட பார்வை , வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்து உள்ளது . போனி கபூர் இந்த படத்தை தயாரித்து உள்ளார் . இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் . நடிகர் சமுத்திரக்கனி , நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து உள்ளனர் .


துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது . இந்நிலையில் ஜனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு வெளியான துணிவு படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குநர் எச்.வினோத்திற்கு ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர் மேலும் பேங்க் மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் போன்ற புதிய கருத்துக்களை மக்களுக்கு இந்த படம் வெளிச்சம் போட்டு காமித்தது .

இந்நிலையில் துணிவு படம் நெட்பிலிக்ஸ் ஓடிடியில் பிப்ரவரி 8-ம் தேதி வெளியாகி இருந்தது . துணிவு படம் ஓடிடி-யில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. படம் வெளியான 24 மணி நேரத்தில் 27 நாடுகளில் ட்ரெண்ட் ஆகி டாப் 10 இடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனை இதுவரை இல்லாத அளவுக்கு முதன் முதலாக இந்திய ஹீரோ செய்திருக்கும் மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus