சூர்யா திரைப்படங்களுக்கு ரெட் கார்ட் விதிக்கப்படுவதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளதாக வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சூர்யா தவித்தார். மே 3ஆம் தேதி ஊரடங்கு முடிந்தாலும், மேலும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு இருப்பதால் படத்தை அவர் அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு 9 கோடிக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது.
இது கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திரையரங்குகளில் திரையிடாமால் நேரடியாக ஒடிடியில் திரையிட முடிவெடுத்த சூர்யா நிறுவனங்களுக்கும், அவர் சார்ந்த நிறுவனங்களுக்கும் ரெட் கார்ட் விதிக்கப்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக சூரரை போற்று திரைப்படமும் திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்கக் கூடாது எனவும் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் சூர்யா குடும்பத்தை சேர்ந்த யாரின் படத்தையும் வாங்க கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபல ரோகினி திரையரங்கு உரிமையாளரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி…