வாரிசு படத்திற்கு நெருக்கடி தரும் உதயநிதி ஸ்டாலின் !

  • October 28, 2022 / 02:28 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து முடிந்து உள்ளது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் இந்த படத்திற்காக ஒன்பது ஏக்கரில் வங்கி செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில் அஜித்தின் 61 வது படத்தின் தலைப்பு ” துணிவு ” என்று படக்குழு அறிவித்து இருந்தது .இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் இருந்தனர் . இந்நிலையில் நடிகர் அஜித் நடித்து வந்த தற்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் ( அக்டோபர் 11 ) முடிகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது .

இந்நிலையில் துணிவு படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . ஏற்கனவே 2023 பொங்கல் தினத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு படம் வெளியாக உள்ளது என்று வாரிசு படக்குழு அறிவித்து இருந்தது . துணிவு படத்தை ஜனவரி 13 ஆம் தேதி வெளியிட உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்து இருந்தார் வாரிசு படத்தை ஜனவரி 12ஆம் தேதி வெளியிட வாரிசு படக்குழு முடிவு செய்து இருந்தது ஆனால் தற்போது உதயநிதி ஸ்டாலின் தற்போது துணிவு படத்தை வாரிசு படம் எந்த தேதியில் வெளியாக உள்ளதோ அதே தேதியில் தான் துணிவு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் . இதனால் இரண்டு படத்திற்கு முதல் நாள் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus