ஆகஸ்டில் ரிலீஸாகவிருந்த அஜித்தின் ‘வலிமை’… கொரோனாவால் தள்ளிப்போகிறதா?

  • May 8, 2021 / 08:20 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இதன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது. முதலில், படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யலாம் என ப்ளான் போட்டிருந்தனர் படக்குழுவினர். தற்போது, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. ஆகையால், படத்தின் ரிலீஸை வருகிற தீபாபளிக்கு அல்லது அடுத்த ஆண்டு (2022) பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus