மீண்டும் இணைந்த சரவணன் மீனாட்சி காம்போ !

  • October 17, 2022 / 11:55 PM IST

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகப்பெரிய நிகழ்ச்சி பிக் பாஸ் . இதுவரை 5 சீசன் நடந்து முடிந்துள்ளது . இந்நிலையில் பிக்பாஸ் 6-வது சீசன் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .

பிக் பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிந்து உள்ளது . நேற்று கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் சில கலந்துரையாடினார்.போட்டியாளர்களுக்கு சில டாஸ்க் கொடுத்தார் . இந்த வீட்டில் எந்த போட்டியாளர் இல்லாமல் இருந்தா நல்லா இருக்கும் என்று ஒவ்வொரு போட்டியாளரிடமும் கேட்கப்பட்டது . இதில் விக்ரமன் பெயரை பலரும் கூறினார்கள் . இவருக்கு அதிகப்படியான நெகடிவ் வாக்கு கிடைத்தது . தற்போது விக்ரமன் அவரது ஆட்டத்தை என்ன என்ன மாற்றங்களை பண்ண போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் மைனா நந்தினி சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார் . மற்ற போட்டியாளர்கள் யாரும் எதிர்பாராத நேரம் இவரது என்ட்ரி அமைந்தது . மேலும் ஏற்கனவே நடிகை ரக்ஷிதாவும் , மைனா நந்தினியும் இணைந்து நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் பெரிய வெற்றி பெற்றது . இவர்கள் இரண்டு பேரையும் மீண்டும் இணைந்து பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus