அடுத்தவர்களை பாதித்தால் மட்டுமே அது கருத்து சுதந்திரம் -RGV

  • June 12, 2020 / 05:08 PM IST

திரைப்படவுலகில் சர்ச்சைக்குரிய இயக்குனர் என்றால் அதில் முன்னணியில் இருப்பவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சமுதாயத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்ட தனது படங்கள் மூலமும், சென்சாருக்கு தீனிபோடும் படங்கள் மூலமும் ஏதேனும் ஒரு பரபரப்பான செய்தியில் தன் இருப்பை காட்டிக் கொண்டே இருப்பார்.

இவர் தற்போது தனது இரண்டு புதிய படங்களுக்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார். அவையும் பல கேள்விகளையும் சர்ச்சையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
இணையதளங்களில் தற்போது வைரலாகி வரும் இந்த இரண்டு பட போஸ்டரை வெளியிட்ட போது , அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் திரையரங்குகளில் படங்கள் இனிமேல் ஏன் வராது என்பது பற்றியும், அவரது கருத்து சுதந்திரம் பற்றியும் பேசி உள்ளார். அது தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

டுவிட்டரில் கடைசியாக பெண்கள் மதுக் கடைகளில் நிற்பது பற்றி அவரது கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா, அவரது படமான ‘கிளைமேக்ஸை’ ஆர்ஜிவி வேர்ல்ட் எனும் OTT தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்தப் படம் நல்ல வசூல் பெற்றதாகவும் அதைத் தொடர்ந்து அவரது அடுத்த படமான’ NNN’படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டிருந்தார். இந்த படமும் அவரது மற்ற படங்கள் போல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொண்டதாகவே காணப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர் தனது அடுத்த படமான “தி மேன் ஹூ கில்டு காந்தி” படத்தின் போஸ்டரை தனது ட்விட்டரில் வெளியிட்டபோது ” கிளைமாக்ஸ் படத்தின் வெற்றியே எனது தொழிலின் தொடக்கமாக கருதுகிறேன். இனிமேல் பொறுத்திருந்து பாருங்கள் பல கருத்துக்களை தகர்க்கும் படங்களை ஆர்ஜிவி வேர்ல்டில் ரிலீஸ் செய்வேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் “கிட்னபிங் ஆப் கத்ரீனா கைப்” படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அப்போது அவர் சினிமாவின் எதிர்காலம் திரையரங்குகள் மட்டுமல்ல OTT தளங்களிலும் கிடையாது, அனைவரது பர்சனல் ஆப்பில் படங்கள் எதிர்காலத்தில் வெளிவரும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவர் வெளியிட்டிருந்த ‘தி மேன் ஹூ கில்டு காந்தி’ போஸ்டரில் காந்தி பாதியும் கோட்ஸே பாதியும் ஒரு புகைப்படத்தில் இருப்பார்கள் . இதை கண்டித்து பலர் கருத்து கூறியதையடுத்து இவர், தனது படங்களில் தனக்கு கருத்து சுதந்திரம் இருக்கும் என்றும், படத்தின் இறுதி கதையை காணாமல் அதைப்பற்றி எதிர்ப்பு தெரிவிப்பது அர்த்தமற்றது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது கடைசி ட்வீட்டில் “தனி மனிதரின் கருத்துச் சுதந்திரம் என்பது மற்றவரை பாதிக்க வேண்டும், இல்லையேல் கருத்து சுதந்திரம் இருப்பதற்கான பலனில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus