இன்சூரன்ஸ் இல்லாத காரில் சென்று ஓட்டு போட்டாரா ‘தளபதி’ விஜய்?… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!
February 22, 2022 / 01:32 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஆண்டு (2021) பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ரிலீஸானது.
விஜய்யின் அடுத்த படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். ‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதன் ஷூட்டிங் வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. படம் வருகிற தீபாவளி அல்லது அடுத்த ஆண்டு (2023) பொங்கலுக்கு ரிலீஸாகுமாம்.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதால், விஜய் நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு தன்னுடைய Maruti Celerio ZXi காரில் சென்று வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து விஜய் இந்த காருக்கு இன்சூரன்ஸ் கட்டவில்லை என்று தண்டோரா போடப்பட்டது. தற்போது, விஜய் தரப்பினர் அக்காருக்கு ஏற்கனவே முறையாக இன்சூரன்ஸ் கட்டியதற்கான ஆதாரத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
For the past few days, a news stating that #ThalapathyVijay's car insurance is still due has been doing the rounds on social media. Here is a copy of the insurance, in which it is clearly stated that the insurance is valid till May 28, 2022! pic.twitter.com/d9tfYuIaEM