‘பிக் பாஸ் 4’ : “இங்க முகமூடியை போட்டுட்டு வந்துருக்கீங்க”ன்னு சொன்ன அனிதா… கடுப்பான ரியோ!

  • December 2, 2020 / 12:54 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ‘கால் சென்டர்’ டாஸ்கின் போது அனிதா சம்பத், ரியோ ராஜுக்கு கால் செய்கிறார். அப்போது அனிதா “individual player-ஆ விளையாடுறீங்களா?” என்று கேட்கிறார்.

அதற்கு ரியோ “ஆமா. நான் individual player-ஆ மட்டுமே விளையாடுறேன்” என்று சொல்கிறார். பின், அனிதா “பார்க்கிறதுக்கு individual player-ஆ விளையாடுற மாதிரி தெரியலைங்குறதையும் நான் சொல்லிடுறேன். வெளியில நீங்க போடாத ஒரு முகமூடியை இங்க போட்டுட்டு வந்துருக்கீங்க. பாதி ரியோவை தான் நான் காட்டுவேன், எனக்கு நீ trophy கொடுன்னா, எப்படி மக்கள் கொடுப்பாங்கன்னு நீங்க நினைக்குறீங்க? criticism சொல்றதுக்கு ஒருத்தர் பெஞ்ச்ல இருந்து எழுந்தாலே உக்கார வச்சுடுறீங்க” என்று சொல்கிறார்.

அதற்கு ரியோ “நான் அது தான் இல்லன்னு சொல்றேன்” என்று சொல்கிறார். பின், அனிதா “excuse me ரியோ ஒரே ஒரு நிமிஷம். கேக்குற கேள்வியை புரிஞ்சுக்கிட்டு நீங்க answer பண்ணலாம்னு நினைக்குறேன்” என்று சொல்கிறார். அதன் பிறகு டாஸ்க் முடிந்ததும் வெளியே வந்து அனிதாவிடம் “good call” என்று ரியோ சொல்கிறார். அதற்கு அனிதா “thank you” என்று சொல்கிறார். அதன் பிறகு சோமசேகரிடம் ரியோ “நான் சரி டாஸ்குங்குறனால control-ஆ இருந்தேன்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.