‘பிக் பாஸ் 4’ : ரியோவுடனான மோதல்… கதறி அழுத அர்ச்சனா!

  • December 8, 2020 / 01:29 PM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா கார்த்திக் எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா ரியோ ராஜிடம் “ஒரே ஒரு நபரை முடிவு செய்து பசர்ல இருந்து பசர்-க்குள்ள முடிக்கணும். நீங்க ஆறு பேரும் அடிச்சுட்டே இருந்தா எனக்கு எப்படி தெரியும்” என்று கோபமாக சொல்கிறார். அதற்கு ரியோ ராஜ் “அது தான் தப்புன்னு சொல்றேன்ல” என்று சொல்கிறார்.

பின், அர்ச்சனா “பச்ச பொய் ரியோ. நீ நம்பமாட்ட போ” என்று சொல்கிறார். அதற்கு ரியோ ராஜ் “அக்கா அவன் சொன்னதெல்லாம் திருப்பி கொடுக்க சொல்லிட்டேன்” என்று சொல்கிறார். பின், அர்ச்சனா “thank you sir” என்று சொல்கிறார். அதன் பிறகு ரியோ ராஜ் “அக்கா ஏன் இப்படி பண்ற?” என்று கேட்கிறார். அதற்கு அர்ச்சனா “ஏன்னா அது உண்மை ரியோ. இல்ல நீ பாதி இடத்துல இல்லவே இல்ல. நீ கேக்கவே இல்ல ரியோ” என்று சொல்கிறார். பின், பாலாஜி முருகதாஸ் அர்ச்சனாவிடம் “கேம் தான இது” என்று சொல்கிறார். அதற்கு அர்ச்சனா “its not a game” என்று சொல்லி கத்தி அழுகிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

Preferring to connect over a shared hobby, many adults on sweetmeet start by mentioning the activity they enjoy most.