விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள் : கல்லூரி சாலை’ சீரியல் மூலம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதன் பிறகு சன் மியூசிக் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின், விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’ சீரியலின் சீசன் 3-யில் ஹீரோவாக வலம் வந்தார். அப்படியே விஜய் டிவியில் சில ஷோக்களை தொகுத்து வழங்கி வந்த ரியோவை ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்ற படத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா.
2017-ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரியோ. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சமீபத்தில், ரியோ ராஜுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்துக்கு பிறகு ரியோ ராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில், நடிகர் ரியோ ராஜ் ஒரு புதிய மியூசிக் வீடியோவில் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
‘கண்ணம்மா என்னம்மா’ என இந்த மியூசிக் வீடியோவிற்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாம். இதற்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இந்த மியூசிக் வீடியோவை இயக்கியுள்ளாராம். இதில் ரியோ ராஜுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ புகழ் பவித்ரா நடித்துள்ளார். இன்று இதன் டீசரை ரியோ ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். முழு பாடல் வீடியோவை வருகிற ஜூலை 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
#KannammaEannamma Teaser out now
Full video on Coming 26thLink is here
https://t.co/GeCZoStlHP@samvishal280999 @itspavithralaks @rio_raj @PingRecords @noiseandgrains @DONGLI_JUMBO @arun_capture1 @karya2000 pic.twitter.com/y9Dh8zhcUl
— Rio raj (@rio_raj) July 20, 2021