2016-ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான படம் ‘இறுதிச்சுற்று’. பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார். ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்திருந்தார். ரியல் லைஃபில் கிக் பாக்ஸரான ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று’ படத்திலும் பாக்ஸராக வலம் வந்திருந்தார்.
‘இறுதிச்சுற்று’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’, அசோக் செல்வனின் ‘ஓ மை கடவுளே’ ஆகிய தமிழ் படங்களில் நடித்தார் ரித்திகா சிங். இவர் தமிழ், ஹிந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
சமீபத்தில், இவர் நடித்த ‘இன் கார்’ என்ற படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வந்த இந்த படத்தை ஹர்ஷ் வர்தன் இயக்கியிருந்தார்.
இப்போது ரித்திகா சிங் நடிப்பில் ‘வணங்காமுடி’ மற்றும் ‘கொலை’ என இரண்டு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஐஸ்வர்யா ராயின் ‘குரு’ படத்தின் ‘நன்னாரே நன்னாரே’ பாடலுக்கு ரித்திகா சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார்.