Singapore Saloon : திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’… வெளியானது மேக்கிங் வீடியோ!

  • February 3, 2024 / 11:04 AM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பிரபல இயக்குநர் கோகுல் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், லால், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதன் பாடல்களுக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளார், ஜாவேத் ரியாஸ் பின்னணி இசையமைத்துள்ளார், சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா.ஆர்.கே. படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus