தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மலையாள திரையுலகில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜோசப்’. இந்த படத்தை இயக்குநர் M.பத்மகுமார் இயக்கியிருந்தார். இதில் ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், மாளவிகா மேனன், ஆத்மியா ராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் மலையாளத்தில் மெகா ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல இயக்குநர் பாலா தனது தயாரிப்பு நிறுவனமான ‘B ஸ்டுடியோஸ்’ சார்பில் கைப்பற்றினார்.
இதில் ஹீரோவாக ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். ‘விசித்திரன்’ என டைட்டில் வைத்துள்ள இந்த படத்தையும் இயக்குநர் எம்.பத்மகுமாரே இயக்கி வருகிறாராம். க்ரைம் த்ரில்லர் ஜானர் படமான இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டார். தற்போது, இந்த படத்துக்கான டப்பிங் பணியை ஆர்.கே.சுரேஷ் துவங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Visithiran dubbing in progress! Very grateful for the awesome opportunity to work with the amazing Director #Padmakumar sir &producer @Bala sir. First time trying 3 different voices, enjoying the new experiences! @gvprakash @onlynikil @shamna_kasim @iamMadhuShalini pic.twitter.com/4ukOJt6i6F
— RK SURESH (@studio9_suresh) November 3, 2020