ரோபோ ஷங்கருக்கு 22-வது திருமண நாள்… அவருக்காக ரஜினி செய்த விஷயம்?

  • November 30, 2022 / 01:06 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரோபோ ஷங்கர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘கோப்ரா’. ரோபோ ஷங்கரின் மகள் இந்திராஜாவும் நடிகையாக வலம் வருகிறார்.

விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இந்திரஜா மிக முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்நிலையில், இன்று ரோபோ ஷங்கர் தனது 22-வது திருமண நாளை முன்னிட்டு டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.

 

இந்த தகவலை கேள்விப்பட்ட ரஜினி இப்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்ததால், அங்கையே ரோபோ ஷங்கரின் குடும்பத்தினரை வரச்சொல்லி வாழ்த்தியதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus