ஒரு படம் வெளியாவதற்கு முன்பே அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதில் நடித்துள்ள முன்னணி ஹீரோ அல்லது அப்படத்தை இயக்கியுள்ள முன்னணி இயக்குநரால் அதிகமாக இருக்கும். இவை இரண்டுமே இல்லாமல் ஒரு சிறிய பட்ஜெட் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அந்த படம் தான் ‘ராக்கி’. இது தான் இதன் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு முதல் படம்.
இப்படம் தயாராகி வெளியீட்டிற்காக பல மாதங்களாக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் தனது அடுத்த படமான ‘சாணிக் காயிதம்’-க்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார் அருண் மாதேஸ்வரன். இதில் இயக்குநர் செல்வராகவன் – நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கிறார்கள்.
சமீபத்தில், நடிகர் தனுஷுக்கும் ஒரு கதை சொல்லி அவரின் கால்ஷீட் டைரியில் அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் அருண் மாதேஸ்வரன். இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கிய முதல் படமான ‘ராக்கி’யின் வெளியீட்டு உரிமையை பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும், அவரது காதலியும் – நடிகையுமான நயன்தாராவும் இணைந்து தங்களது ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் முக்கிய ரோல்களில் வசந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
There r moments in life, wer u feel #WhatGoesAroundComesAround @arunmatheswaran my dear friend for a long time,started together as ADs & now to see our names together in ur first film makes me feel happy:)
Nayan &Me want to present this special film to ya’ll #RowdyAquiresRocky pic.twitter.com/Hs5rfoWUsx
— Vignesh Shivan (@VigneshShivN) December 9, 2020