இணையத்தில் வைரலாகும் ரோலக்ஸ்!!

  • June 13, 2022 / 02:50 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை இயக்கியவர் இயக்குனர் பாண்டியராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா ,இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்தது. வெற்றிமாறன் சூரி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.அந்த படம் வெளியான பின் வாடிவாசல் படம் முழுவதுமாக தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்தது . படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியது .

லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் . விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்று கதாபாத்திரத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு ஒப்பனை செய்த ஒப்பனை கலைஞருடன் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம்
இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus