இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிக் டாக் என்ற செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதன்மூலம் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தவும் செய்கிறார்கள்.
இந்த செயலி மூலம் சினிமா துறை மற்றும் சின்னத்திரையில் நுழைந்தவர்களும் உள்ளனர். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த லாக்டவுனில் எப்பொழுதும் விட இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இந்த செயலியில் சில சர்ச்சையான வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் ரவுடி பேபி என்று அழைக்கப்படும் சூர்யா.
இவர் சமீபத்தில் சுற்றுலா பயணமாக சிங்கப்பூர் சென்று திரும்பியிருக்கிறார். வெளிநாடு சென்று திரும்பியதால் குவாரண்டைனில் இருக்க வலியுறுத்தி அதிகாரிகள் அவரை கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அதைக் கேட்காமல் தேவையில்லாமல் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவரை சோதனை செய்ய வந்த அதிகாரிகளிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் .இது பரபரப்பாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது அவர் வீட்டில் தற்கொலை முயற்சி செய்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். சூர்யா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் இனிமேல்தான் தெரியவரும். இந்த லாக்டவுனில் மனஅழுத்தம் காரணமாக பலர் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாகி வருகிறது!