‘RRR’ பட நடிகை அலியா பட்டின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • March 17, 2023 / 04:21 PM IST

ஹிந்தி திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் அலியா பட். இவருக்கு ஹிந்தி மொழியில் அமைந்த முதல் படமே மெகா ஹிட்டானது. அது தான் ‘ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர்’. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு நடிகை அலியா பட்டிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஹைவே, 2 ஸ்டேட்ஸ், உத்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஷி, கங்குபாய் கத்தியாவடி, RRR’ என படங்கள் குவிந்தது. அலியா பட் நடித்து கடைசியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் ரிலீஸான படம் ‘பிரம்மாஸ்திரா’ (முதலாம் பாகம் : ஷிவா).

இந்த படத்தை இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கியிருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.425.6 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்போது அலியா பட் ஹிந்தியில் ‘ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு (2022) முன்னணி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை அலியா பட் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், ரன்பீர் கபூர் – அலியா பட் தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் 15-ஆம் தேதி அலியா பட்டின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus