கோல்டன் குளோப் விருதை வென்ற கீரவாணி !

  • January 11, 2023 / 03:40 PM IST

பாகுபலி 1 மற்றும் பாகுபலி 02 ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான படம் ரத்தம் ,ரணம் ,ரௌத்திரம் . இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் , ராம்சரண் , சமுத்திரக்கனி , அஜய் தேவ்கன் , ஆலியா , ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . தமிழ் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .குறிப்பாக வசூலிலும் இந்த படம் பல சாதனைகளை செய்துள்ளது .

ஆங்கிலம் அல்லாத பிற மொழிப் படங்களில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக மணி நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்து இருந்தது . ஒரு வாரத்திலேயே இப்படம் 1 கோடியே 85 லட்சத்து 60 ஆயிரம் மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது . இப்படி பல சாதனை செய்த ஆர்.ஆர்.ஆர் படம் தற்போது சாதனைகளில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளது . அதாவது ஆர்.ஆர்.ஆர் படம் ஆஸ்கார் விருதுகளுக்கு அதிகாரப்பூர்வமாக சிறந்த இயக்குனர் , சிறந்த திரைக்கதை ஆசிரியர் ,சிறந்த நடிகர் , துணை நடிகர் உள்ளிட்ட 15 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது .

 

இந்நிலையில் அகாடமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பாடல் “நாட்டு நாட்டு ” என்கிற பெருமையை ஆர் .ஆர் .ஆர் படத்தின் பெருமையை அடைந்து இருந்தது .

இந்நிலையில் தற்போது “நாட்டு நாட்டு ” பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்று சாதனை புரிந்து உள்ளது . மேலும் இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டு எமோஷனலாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus