இதுவரை யாரும் பார்த்திராத ‘RRR’ ஹீரோ ஜூனியர் என்.டி.ஆரின் அரிய புகைப்படத் தொகுப்பு!

  • May 20, 2023 / 02:07 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். ஆரம்பத்தில் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், ‘நின்னு சூடாலனி’ என்ற படத்தில் தான் கதையின் நாயகனாக நடித்தார். இந்த படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ படத்தில் நடித்தார் ஜூனியர் என்.டி.ஆர்.

‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு படங்கள் குவிந்தது. கடந்த ஆண்டு (2022) ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியான படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR).

இதில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து ராம் சரண் நடித்திருந்தார். பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது. ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படமான ‘தேவரா’வை கொரட்டாலா சிவா இயக்குகிறார்.

இந்நிலையில், இன்று (மே 20-ஆம் தேதி) நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் அரிய புகைப்படத் தொகுப்பு இதோ…

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus