நிறைவுபெற்ற ‘RRR’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு!

  • December 1, 2020 / 11:15 AM IST

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலி பிரம்மாண்ட காட்சிகளுடன் கூடிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு பெயர் போனவர்.

தொடர்ந்து பல வெற்றி தெலுங்கு திரைப்படங்களை எழுதி இயக்கி வந்த இவர் 2012ஆம் ஆண்டு நானி மற்றும் சமந்தா இணைந்து நடித்து வெளியான “நான் ஈ” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் இரண்டு பாகங்களாக வெளி வந்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்பட்ட திரைப்படம் “பாகுபலி”.

இந்த திரைப்படம் வெளியானதன் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது ஐந்து மொழிகளில் வெளியாவதற்காக உருவாகி வரும் RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்தின் 50 நாள் கொண்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே இந்த படப்பிடிப்பு நடந்ததாகவும் இனி அடுத்த கட்ட படப்பிடிப்பு புதிய லொகேஷனில் நடைபெறும் என்றும் திரைப்படக் குழு தெரிவித்துள்ளது.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே இந்த படத்திற்கான ஆவலை அதிகரித்து வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus