அடேங்கப்பா… ‘RRR’ ஹீரோ ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். ஆரம்பத்தில் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆர், ‘நின்னு சூடாலனி’ என்ற படத்தில் தான் கதையின் நாயகனாக நடித்தார். இந்த படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ படத்தில் நடித்தார் ஜூனியர் என்.டி.ஆர்.

‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு படங்கள் குவிந்தது. இப்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR). இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ளார்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்கள். மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு ரூ.440 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Share.