‘RRR’ படத்தின் வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார்… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த எஸ்.எஸ்.ராஜமௌலி!
May 23, 2023 / 01:01 PM IST
|Follow Us
பிரபல பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் ‘தோர், பிக் கேம்’ போன்ற பல ஹாலிவுட் படங்களிலும், ‘டெக்ஸ்டர், வைக்கிங்ஸ்’ போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.
இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் கடந்த ஆண்டு (2022) வெளியான ‘RRR’ படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் மிரட்டியிருந்தார். இதில் தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படத்தை முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். தற்போது, நடிகர் ரே ஸ்டீவன்சன் (வயது 58) நேற்று முன் தினம் (மே 21-ஆம் தேதி) இயற்கை எய்தினார் என தகவல் கிடைத்துள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Shocking… Just can't believe this news. Ray brought in so much energy and vibrancy with him to the sets. It was infectious. Working with him was pure joy.