கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரபல பாடகி ஜானகி இறந்துவிட்டதாக இணையதளம் முழுவதும் செய்தி பரவி வந்தது. இந்த அதிர்ச்சியான செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தார்கள்.
பின்பு அவரது மகன் முரளி கிருஷ்ணா நேர்காணல் ஒன்றில் தனது தாய்க்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டதாகவும், இப்போது அவர் குணமாகி வருகிறார் என்றும், அவர் இறந்துவிட்டதாக வந்த செய்தி முழுவதும் வதந்தி என்றும் கூறியிருக்கிறார்.இது அவரது ரசிகர்களை நிம்மதி அடையச் செய்துள்ளது.
இந்த வதந்தி பற்றி கண்டனம் தெரிவித்து பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர்” இன்றுதான் நான் பாடகி ஜானகி அம்மாவிடம் தொலைபேசியில் பேசினேன். அவர் நலமாக இருக்கிறார். அவர் இறந்து விட்டதாக வந்த வதந்தி முதல் முறை அல்ல ஆறாவது முறை. அவர்களின் குடும்பம் பற்றியும் ரசிகர்கள் பற்றியும் ஏன் கவலைப் படாமல் இப்படி சிலர் வதந்தியை பரப்புகிறார்கள். உங்களையெல்லாம் நற்பண்பு கொண்டவர்கள் என்று கூற முடியுமா? என்று ஆவேசமாக கேட்டிருக்கிறார்.
மேலும் அவர் சோசியல் மீடியாவை நல்ல விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்துங்கள் என்று எடுத்துரைத்துள்ளார்.
இதைப்பற்றி பாடகி ஜானகி தானாகவே முன்வந்து ஒரு நேர்காணலில் தற்போது செய்தி வெளியிட்டுள்ளார். அவர்” இது முதல் முறை அல்ல ஆறாவது முறை நான் இறந்து விட்டதாக வரும் வதந்தியாகும். எனக்கு இந்த செய்தி மிகவும் வருத்தத்தை அளித்தது. நான் நலமாக உள்ளேனா என்று பலரும் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்கள்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த ஆடியோ பதிவின் மூலம் அவர் நலமாக உள்ளார் என்று நமக்கு தெரிந்துள்ளது.