சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் சிவக்குமார். 1965-ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ தான் சிவக்குமார் அறிமுகமான முதல் தமிழ் படம். இந்த படத்தை இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கியிருந்தார். அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவக்குமார்.
சிவக்குமார் கடைசியாக ‘தல’ அஜித் கதையின் நாயகனாக நடித்த படத்தில் அவருக்கு அப்பாவாக நடித்திருந்தார். அது தான் ‘பூவெல்லாம் உன் வாசம்’. இந்த படத்தை இயக்குநர் எழில் இயக்கியிருந்தார். நடிகர் சிவக்குமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்தபோது நடிகர் சிவக்குமாருக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது தொடர்பாக சிவக்குமார் குடும்பத்தினரிடம் விசாரிக்கையில் “சிவக்குமாருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என்று தான் வந்தது. ஆகையால், தவறான தகவலை நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.