விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த விஜய்யின் முதல் ரசிகன் !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் பீஸ்ட் .இந்த படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக இருக்கிறது .அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .

இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் படத்தின் ட்ரைலரும் ரசிகர்களை கவர்ந்து உள்ளது .படத்தின் முன் பதிவு தொடங்கி உலகம் முழுக்க பல நாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது .

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் அனைவரும் 13-ஆம் தேதி படத்திற்காக காத்திருக்கும் வேளையில் நடிகர்
விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் பீஸ்ட் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார் . நடிகர் விஜயும் அவர் தந்தையும் நேரடியாக பேசிக் கொள்வது இல்லை என கூறப்படுகிறது .

இந்த நிலையில் சந்திரசேகர் பதிவிட்ட வீடியோவை பலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Share.