தனுஷ் திரைப்படத்தை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா!

  • September 11, 2020 / 05:29 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்பு நடிகராக உருவெடுத்து இன்றுவரை தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் எஸ்ஜே.சூர்யா. தன்னுடைய வித்தியாசமான கதை தேர்விற்காக ரசிகர்களால் ரசிக்கப்படும் எஸ்ஜே.சூர்யா சமீபத்தில் “மான்ஸ்டர்” என்கிற காமெடி திரில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் “பொம்மை” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி “உயர்ந்த மனிதன்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் “நெஞ்சம் மறப்பதில்லை” மற்றும் “இரவாகாலம்” ரிலீசுக்காக காத்திருக்கிறது.

தற்போது தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி” படம் குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து, தனுஷை பாராட்டியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

ஆனந்த கண்ணீரில் நனைய விட்டு திரைப்படம் இந்த படத்தை பார்த்துவிட்டு தனுஷிற்கு போன் செய்து பாராட்டியது இன்று கூட நினைவில் உள்ளது என்றிருக்கிறார். இந்த பதிவிற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus