விஜயகாந்தை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர் ! வைரலாகும் ஸ்டில்ஸ்

  • February 3, 2023 / 07:15 PM IST

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய முதல் படமான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் விஜயகாந்தை நாயகனாக்கினார் , அதனைத் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை விஜயகாந்துக்கு கொடுத்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட்ட விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பேச முடியாமல் தவித்து வருகிறார். இதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டார் . தற்போது தொடர் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், சினிமா அரசியல் என எதிலும் தலையிடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், எஸ்.ஏ.சி தனது ட்விட்டர் பக்கத்தில், என் உயிரை நான் சந்தித்த போது என்ற பதிவுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus