யூடியூபில் அதிக டிஸ்லைக்குகளை பெற்ற சடக்2 ட்ரெய்லர்!

  • August 13, 2020 / 03:16 PM IST

மகேஷ் பட் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் பாலிவுட் திரைப்படம் “சடக்2”. தற்போது இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் வெளியானது. புதன்கிழமை வெளியான இந்த ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே சுமார் 2.7 மில்லியன் டிஸ்லைக்குகளைப் பெற்றது.

மகேஷ் பட் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் சஞ்சய்தத், பூஜா பட், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலைக்கு பாலிவுட்டில் நடந்த நெப்போடிசம் தான் காரணம் என்று சுஷாந்த் ரசிகர்கள் கோபமாக இருந்த நிலையில், இந்த படத்திற்கு ஏற்கனவே எதிர்ப்புகள் இருந்தது.

இந்த நிலையில் தற்போது தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சுசாந்த் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானது முதலே அதை டிஸ்லைக் செய்து வருகிறார்கள். தற்போது சுமார் 5.3 மில்லியன் டிஸ்லைக்குகளை பெற்றுள்ள இந்த வீடியோவின் டிஸ்லைக்குகள் நேரம் போகப் போக அதிகமாகிக்கொண்டே வருகிறது.

இதற்கு முன்னர் யூடியூபில் இந்த வீடியோவிற்கு ஒரு மில்லியன் டிஸ்லைக் கிடைக்குமா என்று ஒரு ஸ்வீடிஷ் கேமர் வீடியோ பதிவிட்டிருந்தார், அதைக் காட்டிலும் அதிகமான டிஸ்லைக்குகளை இந்த சடக்2 ட்ரெய்லர் வீடியோ பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் யூடியூபில் 2018 ஆம் ஆண்டு யூடியூப் ரீவைண்ட் என்ற வீடியோ அதிக டிஸ்லைக்குகளை பெற்றது. அந்த வீடியோ சுமார் 18 மில்லியன் டிஸ்லைக்குகளை தற்போது வரை பெற்றுள்ளது‌. இன்னும் சில நாட்களில் இந்த சாதனையையும் சதக் 2 டிரைலர் வீடியோ முறியடித்து விடும் என்று எதிர்பார்த்து சுஷாந்த் ரசிகர்கள் தொடர்ந்து இந்த வீடியோவை டிஸ்லைக் செய்து வருகிறார்கள்.

மேலும் கமெண்ட்டில் சுஷாந்த் ரசிகர்கள் இந்தப் படம் வியூசெய்வதற்கு கூட தகுதியற்றது. அதனால் அனைவரும் டிஸ்லைக் மட்டும் செய்து விட்டு போகவும் என்று தொடர்ந்து தங்கள் கோபத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus