2008 ஆம் ஆண்டு வெளியான “தாம்தூம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் சாய்பல்லவி. இவர் மலையாள படமான “பிரேமம்” மூலம் ரசிகர்கள் இடையே நீங்காத இடத்தைப் பிடித்தார்.
“உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் நடன கலைஞராக பலர் மத்தியில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட இவர், நடிகையாக உருமாறி சமீபத்தில் தனுஷ் ஜோடியாக “மாரி 2” படத்திலும் நடிகர் சூர்யா ஜோடியாக “என்ஜிகே” படத்திலும் நடித்திருந்தார்.
இவர் தற்போது தெலுங்கு படமான “லவ் ஸ்டோரி” படத்தில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகை சாய் பல்லவி அனுப்பி உள்ளதாகவும் அதற்கு அவர் ஒப்புக் கொண்டு இந்த படம் விரைவில் உருவாக உள்ள தாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.
நடிகை சௌந்தர்யா, கார்த்தி நடிப்பில் வெளியான பொன்னுமணி என்ற திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்று பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர். ஒரு விமான விபத்தில் திடீரென இறந்த இவரது மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியது. இவரின் வாழ்க்கை வரலாற்று கதை விரைவில் வரப்போவது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.