அடேங்கப்பா… சாய் பல்லவியின் ‘கார்கி’ படத்தின் முதல் நாள் வசூல் இவ்ளோவா?

  • July 16, 2022 / 05:50 PM IST

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் சிவகார்த்திகேயனின் புதிய படம் மற்றும் ‘கார்கி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘கார்கி’ படத்தை இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இந்த படம் நேற்று (ஜூலை 15-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மிக முக்கிய ரோல்களில் காளி வெங்கட், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், பிரதாப், லிவிங்க்ஸ்டன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார்.

‘Blacky Genie & My Left Foot புரொடக்ஷன்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா தனது ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்துள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இந்த படம் உலக அளவில் ரூ.50 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus