2008 ஆம் ஆண்டு வெளியான “தாம்தூம்” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் சாய்பல்லவி. இவர் மலையாள படமான “பிரேமம்” மூலம் ரசிகர்கள் இடையே நீங்காத இடத்தைப் பிடித்தார்.
“உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் நடன கலைஞராக பலர் மத்தியில் அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட இவர், நடிகையாக உருமாறி சமீபத்தில் தனுஷ் ஜோடியாக “மாரி 2” படத்திலும் நடிகர் சூர்யா ஜோடியாக “என்ஜிகே” படத்திலும் நடித்திருந்தார்.
இவர் தற்போது தெலுங்கு படமான “லவ் ஸ்டோரி” படத்தில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகை சாய் பல்லவி அனுப்பி உள்ளதாகவும் அதற்கு அவர் ஒப்புக் கொண்டு இந்த படம் விரைவில் உருவாக உள்ள தாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.
மேலும் நடிகர்கள் நாக ஷர்யா மற்றும் நானி ஷூட்டிங் ஸ்பாட்டில் சாய்பல்லவி மிகவும் கடுமையாக நடந்து கொள்வார் என்று குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்கள். இவர் நாக ஷர்யாவுடன் ‘கரு’ மற்றும் நானியுடன் ‘எம்சிஏ’ என்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ம ரவுடிபேபிக்கு இவ்வளவு கோபம் வருமா என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.